×

நகை பறிப்பு வழக்கில் சிக்கியவருக்கு கொரோனா

இடைப்பாடி, அக்.23: இடைப்பாடியில் நகை பறிப்பு வழக்கில் சிக்கியவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கைது செய்த போலீசாரிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம்(55). விசைத்தறி அதிபரான இவர், கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி அங்குள்ள டாஸ்டாக் கடைக்கு சென்று மது அருந்திய போது, போதையில் சரிந்த அவரிடமிருந்து 4 பவுன் சங்கலி மற்றும் மோதிரத்தை, அங்கு மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நேற்று கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சேகர்(50),  செல்வம்(32) ஆகியோரை இடைப்பாடி எஸ்.ஐ. ராஜேந்திரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனை செய்ததில், சேகருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், அவர் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செல்வத்தை சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகை பறிப்பு வழக்கில் சிக்கியவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரை கைது செய்த போலீசார் கலக்கமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பரிசோதனை செய்து, காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...