×

வெங்காயம் விலை கிலோ ₹100 ஆக உயர்வு

தர்மபுரி, அக்.23:தர்மபுரி மாவட்டத்திற்கு ஓசூர், பெங்களூரு, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை பெய்து வருவதால், வெங்காய மகசூல் குறைந்து, விலை படிப்படியாக உயர்ந்தது.  ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம், கடந்த 2 நாட்களாக கிலோ ₹100க்கு விற்பனையாகிறது. உழவர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ₹90க்கும், சின்ன வெங்காயம் ₹75க்கும் விற்பனையாகிறது. இது குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்திற்கு தினமும் 15 டன் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

தொடர் மழை காரணமாக நடவு செய்த வெங்காயம் அழுகி விட்டதால், கடந்த ஆண்டு இருப்பு வைத்த வெங்காயம் மட்டுமே, தற்போது விற்பனைக்கு வருகிறது. இதனால் 30 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகிய இரண்டுமே ஒரு கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Tags :
× RELATED ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை குறைந்தது