×

வங்க கடல் பகுதியில் அக்.25 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் சேவை மையம் தகவல்

நாகர்கோவில், அக்.23: வங்க வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வங்க கடல் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:மத்திய மற்றும் அதனையொட்டி வடக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும். ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதிகளிலும் பலத்த காற்று வீசும். மேலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். வடக்கு வங்க கடல், அதனையொட்டி மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீசும். வரும் 25ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bay of Bengal ,
× RELATED வங்க கடலில் நவ. 23-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி