அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்றம் 10 நாளில் திறக்க நடவடிக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகவல்.

அம்பை, அக்.23:  அம்பையில் பழைய கட்டிடத்தில் இயங்கிய நீதிமன்றத்தை இடித்து ரூ.7.23 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக திறக்காமல் உள்ளது.  நீதிமன்றத்தை திறக்க கோரி வக்கீல்கள் பலமுறை  போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் நேற்று அம்பை வந்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் சாகி, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்னும் 10 நாளில் நீதிமன்றம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிய நீதிமன்ற நுழைவாயில் அருகில் இருந்த புறக்காவல் நிலைய சாவடியை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி நசீர் அகமது, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பத்மா, தென்காசி மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், அம்பை சார்பு நீதிமன்ற நீதிபதி கவிதா, செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி இளையராஜா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் மற்றும்  அம்பை வக்கீல் சங்க தலைவர்கள் கந்தசாமி, ராஜேந்திரன், செல்வ அந்தோணி மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

Related Stories: