×

எண்ணெய்யை திரும்ப, திரும்ப பயன்படுத்த கூடாது தீபாவளி ஸ்வீட், காரவகை தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

தேனி, அக். 23: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகை தயாரிப்பவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நவநீதன் தலைமை வகிக்க, மாவட்ட ஹோட்டல்  சங்க செயலாளர் வேல்முருகன், பொன்முருகன் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டிராஜின் வரவேற்றார். கூட்டத்தில் தரமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கான வழிகாட்டுதல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பது குறித்து விளக்கப்பட்டது. அப்போது, இனிப்பு கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மைதா, சர்க்கரை, கடலை மாவு, பருப்பு வகைகள் எண்ணெய், நெய், டால்டா ஆகியவற்றின் தரம் தெளிவானதாக இருக்க வேண்டும், தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய்யை திரும்ப திரும்ப பயன்படுத்த கூடாது, செயற்கை நிறமூட்டிகள், எதுவும் பயன்படுத்தக்கூடாது,  

தயாரிப்பு கூடம் சுகாதார வசதியுடன் பணியாளர்கள் தூய்மை ஆடை அணிந்து பணிபுரிய வேண்டும், உணவு பண்டங்கள் தயாரித்து சேமித்து வைக்கப்படும் சில்வர், அலுமினிய பாத்திரங்களை தூய்மையானதாக இருக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாடு எதுவும் இருக்கக்கூடாது, பேக் செய்யப்பட்ட மற்றும் பேக் செய்யப்படாத இனிப்பு கார வகைகள் பொதுமக்களுக்கு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் போது அதன் காலாவதியாகும் தேதி கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பால் சம்பந்தப்பட்ட ஸ்வீட்டுகள் 3 நாளைக்கும் நெய் சம்பந்தப்பட்ட ஸ்வீட் 5 நாட்களுக்கும் காரவகைகள் 7 நாட்களுக்கும் உட்பட்டு பயன்படுத்தப்பட வேண்டுமென பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும் என் விளக்கப்பட்டது. இதில் 75க்கும் மேற்பட்ட இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள்- விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : caraway makers ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு