×

பயிர் சாகுபடி கணக்கெடுப்பில் வருவாய்த்துறையினர் தீவிரம்

இளையான்குடி, அக்.23:  இளையான்குடி பகுதியில்  நடப்பாண்டிற்கான சாகுபடி கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இளையான்குடி தாலு£வில் அ.திருவுடையார்புரம், இளையான்குடி, தாயமங்கலம், சாலைக்கிராமம், சூராணம் ஆகிய வருவாய் பிர்க்காக்களுக்கு உட்பட்ட கிராமங்களில்,  கடந்த சில நாட்களுக்கு முன்  மழை பெய்தது. இளையான்குடி பகுதியில்  கடந்த சில மாதங்களாக ஏமாற்றி வந்த  மழை,  கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு, பயிர்கள் ஓரளவு வளர்ந்துள்ளது. அதனால் நடப்பாண்டிற்கான (2020) பயிர் சாகுபடி பதிவதற்காக  இளையான்குடி தாலுகாவில், கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் நடப்பாண்டிற்கான சாகுபடி கணக்கீடு செய்யும் பணியில், வருவாய்த்துறையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர்(ஆர்ஐ), விஏஓ, தலையாரி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரம்