×

கொரோனா விதிமுறை மீறல் ரூ.2 லட்சம் அபராதம் வசூல்

காரைக்குடி, அக்.23:  கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இதில் தனிமைப்படுதப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்தால் ரூ.500, எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் ரூ.500, நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறினால் ரூ.5 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ஆணையர் ரெங்கராஜூ உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், சுந்தர், ரவிசங்கர், ஆதிநாராயணன், பிருந்தார் ஆகியோர் நகர் பகுதிகள் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறனர். கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் நேற்று வரை விதிமுறை மீறிய 529 நபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை...