×

சின்ன இலந்தைகுளத்தில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

அலங்காநல்லூர். அக். 23: மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் இயங்கி வந்த 3 மதுபான கடைகள் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பேரூராட்சி எல்லைப் பகுதியில் இருந்து நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்கடைகளை அருகே உள்ள கிராமப்பகுதிகளில் அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால்அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் 15 மேட்டுப்பட்டி, பெரியஊர்சேரி, பாலமேடு பேரூராட்சி, கல்லணை, கோட்டைமேடு எ ஒவ்வொரு இடங்களிலும் டாஸ்மாக் கடை வைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. ஆனால், அந்த பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடை அமைக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது அலங்காநல்லூர் தனிச்சியம் மெயின் ரோட்டில் உள்ள சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியோடு டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கிராம மக்கள் சுவரொட்டி மூலம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடையை விவசாய பம்பு செட் மோட்டார் அறையில் அமைக்க இடம் தேர்வு செய்த டாஸ்மார்க் நிர்வாகத்தையும் கண்டித்து போராட்டம் நடத்தஉள்ளதாக தெரிவித்தனர். நடுத்தர, ஏழை, விவசாயிகள் உள்ள கிராமப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

Tags : protest ,opening ,store ,Tasmac ,Chinna Ilandaikulam ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா