×

கர்நாடகா வரத்து அதிகரிப்பு 2 கிலோ இஞ்சி நூறு ரூபா தான் திண்டுக்கல்லில் கூவி, கூவி விற்பனை

திண்டுக்கல், அக். 23: திண்டுக்கல்- திருச்சி சாலையில் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு உள்பட 3 பேர் சரக்கு வாகனத்தில் இஞ்சி வியாபாரம் செய்தனர். 2 கிலோ இஞ்சி ரூ.100க்கு விற்பனை செய்தனர். இஞ்சி விலை மலிவாக இருந்ததால் அவ்வழியே சென்ற அனைவரும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து பிரபு கூறுகையில், ‘முன்பு ஒரு கிலோ பழைய இஞ்சி ரூ.150க்கு விற்பனையானது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் இஞ்சி விளைச்சல் அதிகமானதால் வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறைந்துள்ளது. நாங்கள் திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வருகிறோம். இஞ்சி விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்’ என்றார்.

Tags : Karnataka ,Dindigul ,
× RELATED நீலகிரி மாவட்டத்திற்கு வரும்...