×

திண்டுக்கல்லில் சாக்கடை உடைப்பை சரிசெய்தனர்

திண்டுக்கல், அக். 23: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பழனி ரோட்டில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி நேற்று தினகரனில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்தனர். இதேபோல் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தொடர் பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டியது மாநகராட்சியின் கடமை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewer break ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை