×

கேஎஸ்.அழகிரி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்

திண்டுக்கல், அக். 23: திண்டுக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரியின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகிக்க, முன்னாள் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது சித்திக் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சொசைட்டி தெருவிலுள்ள சுதந்திர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாநகர மாவட்ட துணை தலைவர்கள் ராஜாஜி, அரபு முகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி, மாநகர மாவட்ட மகளிரணி தலைவி ரோஜா பேகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : KS Alagiri Birthday Celebration Congress Celebration ,