×

நத்தம் பகுதியில் ₹30 லட்சம் மதிப்பு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

நத்தம், அக். 23: நத்தம் அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி, மாதவநாயக்கன்பட்டியில் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை வகிக்க, திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலருமான விஜயன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி கலையரங்கை திறந்து வைத்து பேசுகையில், ‘மத்திய அரசிடமிருந்து நத்தம் ஒன்றியத்தில் பள்ளி சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற பணிகள் எம்ஜிஎன்ஆர் இஜிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி நிதி பெறப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் ஆய்வுக்கு அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு தரவில்லை.

எனவே தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார்’ என்றார். முன்னதாக எம்பி நத்தம் பேரூராட்சி கொண்டையம்பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம், செந்துறை ஊராட்சி குரும்பபட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடைகளையும் திறந்து வைத்தார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் அழகர்சாமி, பாக்கியலட்சுமி, ராசு, ஜோதி, தங்கப்பாண்டி, கருத்தப்பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனியம்மாள் மகாலிங்கம், தேன்மொழி முருகன், ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, வெண்ணிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Inauguration ceremony ,buildings ,area ,Natham ,MLA ,
× RELATED வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா