திருவெறும்பூர் அருகே ஓய்வு பெல் ஊழியர் பைக் மோதி பலி

திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஓய்வு பெல் ஊழியர் பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே மலைக்கோயில் ஜானகிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(67). ஓய்வு பெற்ற பெல் ஊழியர். இந்நிலையில் நேற்றிரவு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>