×

பாண்டிசத்திரத்தில் கஜா புயலில் சேதமடைந்த நெல் கொள்முதல் நிலையத்தை தொழிலாளர்களே சீரமைத்தனர்

திருத்துறைப்பூண்டி, அக்.23:திருத்துறைப்பூண்டி அருகே பாண்டிசத்திரத்தில் கஜா புயலில் சேதமடைந்த நெல் கொள்முதல் நிலையத்தை சுமை தூக்கும் தொழிலாளர்களே சீரமைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கஜாபுயலில் சேதம் அடைந்த பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், சுற்று சுவர்கள் அங்கன்வாடிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போன்ற எதுவும் இது வரை சீர்மைக்க வில்லை. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி சத்திரம்நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த கஜா புயலில் சேதமாகி இரண்டு ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குறுவை அறுவடை செய்த நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க அங்கு பணியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்களே ஒன்று சேர்ந்து ரூ.30 ஆயிரம் செலவில் கீற்று, மரம் வாங்கி கூரையில் போட்டு அதற்கு மேல் அரசு வழங்கியுள்ள தார்பாய்கள் போட்டு மூடி தாற்காலிமாக சீரமைத்துள்ளனர். மேலும் தரையில் மூட்டைகள் நனையாமல் இருக்க தரையின் கீழே கற்கள், கட்டைகளை அடுக்கி அதன்மேல் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் சாமிநாதன் கூறுகையில், பாண்டிசத்திரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கஜாபுயலில் சேதம் அடைந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் சீர்மைக்கவில்லை. கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைந்து அரசு இழப்பு ஏற்படமால் இருப்பதற்காக லோடுமேன்களே சேர்ந்து 30 ஆயிரத்தில் கீற்று, மரம் வாங்கி போட்டு உள்ளோம். எனவே விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல நிலைய அலுவலர்கள், சுமைதூக்கம் தொழிலாளர்கள் நலன் கருதி சேதம் அடைந்த கொள்முதல் நிலையத்தை அரசு சீரமைத்து தர வேண்டும் என்றார்.

Tags : paddy procurement center ,Pondicherry ,storm ,Kazha ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...