×

பயிற்சி டாக்டர் உள்பட புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று

திருவாரூர், அக்.23: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பயிற்சி டாக்டர் ஒருவர் உட்பட 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 9,188 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 24 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர் உட்பட திருவாரூர் 16 பேர், மன்னார்குடி 17 பேர், குடவாசலில் 6 பேர், கோட்டூரில் 6 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,newcomers ,trainee doctor ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...