×

ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

புதுக்கோட்டை, அக். 23: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் துரையரசன். இவர் பட்டா மாறுதலுக்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பட்டா மாறுதல் செய்து தர விஏஓ மணிகண்டன் ரூ.11ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரையரசன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைபடி நேற்று முன்தினம் துரையரசன், விஏஓ மணிகண்டனிடம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : VAO ,
× RELATED தென்காசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO கைது