×

மொபட் மீது லாரி மோதி முதியவர்கள் 2 பேர் பலி

புதுக்கோட்டை, அக்.23: தஞ் சாவூர் மாவட்டம் வல்லம் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (50). மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் அழகர் (62). இவர்கள் இருவரும் ஒரு மொபெட்டில் வல்லத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு கடலை வாங்குவதற்காக நேற்று வந்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண் டிருந்தனர். அப்போது, வாராப்பூர் அருகே நெருஞ் சிப்பட்டி பகுதியில் சென்றபோது, இவர்களது மொபெட் மீது அந்த வழி யாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ரெத் தினவேல் உயிரிழந்தார். பலத்த காயமடை ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அழகரை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அழகர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து செம் பட்டிவிடுதி போலீசார் விப த்துக்கு காரணமான லாரி டிரைவர்ம கொத்தமங்கலம் ராஜ்குமாரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கெலமங்கலம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ் லாரி மீது மோதல்:15 பேர் காயம்