×

முதல்வர் பங்கேற்ற விழாவில் திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை

அறந்தாங்கி, அக்.23: அறந்தாங்கியில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்எல்ஏ பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் வேளாண் திட்டத்திற்கு அரசு ஆதரவளித்தது. தற்போது விவசாயிகளின் காவலன் என்கிறார்கள், மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து திட்டத்திற்கு எத்தனை கோடி செலவு என்பதை தெளிவாக அறிக்கை அளிக்கவேண்டும் என்றும், காவிரி -வைகை- குண்டாறு இணைப்பு என்பது குறித்து நாங்கள்தான் செய்தோம் என்று அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால் ஏற்கனவே 2010 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி கரூர் மாவட்டம் மாயனூர் இல் அணைகட்டும் விழாவில் இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த திட்டம். மேலும் மாவட்டத்தில் உள்ள 3 திமுக எம்எல்ஏக்களுக்கு முறையான அழைப்பு முதல்வர் வருகைக்காக இல்லை. கொரோனா டெஸ்ட் எங்களுக்கு எடுக்கவில்லை. அதனால் நாங்கள் செல்லவில்லை, அப்படி போனால் டெஸ்ட் எடுத்தால் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எடுத்தால்தான் வரமுடியும் என்றார்.

Tags : DMK ,Chief Minister ,
× RELATED மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உள்பட 350 பேர் மீது வழக்கு