×

நிலத்தை அடகு வைத்த

மயிலாடுதுறை,அக்.23: மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பானுமதி(60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் குத்தகைக்கு அளித்துள்ளார். இதை கேள்விப்பட்ட அவரது மகன் ராஜமாணிக்கம், என்னை கேட்காமல் எப்படி நிலத்தை குத்தகைக்கு கொடுக்கலாம் என்று கேட்டுள்ளார். இதில் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜமாணிக்கம் தாயை அடித்து உதைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார், இது குறித்து பாகசாலை காவல்நிலையத்தில் பானுமதி புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜமாணிக்கத்தை தேடி வருகின்றனர்.

Tags : land ,
× RELATED நில புரோக்கர் பரிதாப பலி