×

கூலி தொழிலாளி கொலை வழக்கில்

வேதாரண்யம்,அக்.23: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன் (36). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று சிவசங்கரன் தனது வீட்டின் எதிரே உள்ள கோயில் வளாகத்தில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவசங்கரன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, புஷ்பவனத்தை சேர்ந்த முருகையன் மற்றும் அவரது மகன் காஞ்சிநாதன் இருவரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும், இந்த வழக்கில் புஷ்பவனத்தை சேர்ந்த அருள்அழகனை வேதாரண்யம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த கொலையில் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (எ) செந்தில்நாதன் (34) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : murder ,
× RELATED யானைகவுனி கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்ததால் விஜயகுமார் தற்கொலை