×

திருக்கடையூர் ஊராட்சியில்

தரங்கம்பாடி, அக். 23: திருக்கடையூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நாகை மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) தீபனா விஸ்வேஸ்வரி ஆய்வு செய்தார். திருக்கடையூர் ஊராட்சியில் ரூ.19 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், வெள்ளக்குளம் கிராமத்தில் ரூ. 15 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் சிமென்ட் சாலை, சிங்கானோடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 4 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுசுவர், ரூ.5லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிங்கனோடை பேருந்து நிழற்குடை ஆகியவற்றை உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி பார்வையிட்டார். அவருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) தியாகராஜன், ஒன்றிய பொறியாளர் சோமசுந்தரம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED புலிவலம் ஊராட்சியில் கொசுமருந்து...