×

பவர்கிரீட் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

காங்கயம், அக்.23: மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம் சார்பில் 4 அரசு பள்ளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரீட் ஊதியூர் அடுத்த நொச்சிப்பாளையத்தில் (நியூ புகளூர்) மின் நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு பொதுநலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஊதியூர் அடுத்துள்ள நல்லிமடம், சங்கரண்டாம்பாளையம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் தாராபுரம் நகர் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கும் மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். அந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் மேற்கண்ட பள்ளிகளில் நடைபெற்றது. இதில் தாராபுரம் டி.இ.ஓ. சிவக்குமார், பவர்கிரீட் நிறுவனத்தின் முதுநிலை துணை மேலாளர் மோகன்காந்தி, பள்ளி துணை ஆய்வாளர் அப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : government schools ,Powergrid ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து...