×

‘பார்’ ஆக மாறிய தளி ரோடு சுரங்கப்பாதை

உடுமலை, அக். 23:  உடுமலையில் இருந்து தளி செல்லும் சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் பகுதியில் சுரங்கப்பாதையும் உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் குடிமகன்கள் மதுவை வாங்கி வந்து கூட்டமாக அமர்ந்து குடிக்கின்றனர். பின்னர் பாட்டிலேயே அங்கே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் வாகனங்களின் டயர் பஞ்சர் ஆவது அடிக்கடி நடக்கிறது. சுரங்கப்பாதை வழியே பெண்கள் செல்ல முடியவில்லை. பகல் நேரங்களிலும் அமர்ந்து குடிக்கின்றனர். அருகே அரசுப் பள்ளி மற்றும் மில் உள்ளது.குடிகாரர்களால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, காவல்துறையினர் இதை கண்காணித்து, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
சுரங்கப்பாதையை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tali Road ,tunnel ,Bar ,
× RELATED திருவாரூர் அருகே கூடூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேக்கம்