×

2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா மேபீல்டுபீல்டில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு

கூடலூர்,அக்.23:கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதி மேபீல்டு. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனை ஒட்டி தனியார் தேயிலை தோட்ட குடியிருப்புகளும் உள்ளன.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மேபீல்டு பஜார் பகுதியில் உள்ள கடைகளில் வாங்குவது வாடிக்கை. இந்நிலையில் இங்குள்உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த  ஒரு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 8 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும்  மேபீல்டு பஜார் பகுதி ஆகியவற்றில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சுகாதார துறையினரும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக மேபீல்டு பஜாரில் உள்ள கடைகளை மாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டோன்மென்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு உள்ளவர்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி கூட்டமாக சேருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : shops ,Corona Mayfieldfield ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து...