×

கொரோனா சமூக பரவலா என அறிய ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்

பொள்ளாச்சி, அக். 23:  பொள்ளாச்சி பகுதியில் கொரோனா சமூக பரவலாக மாறியதா என்பதை அறிய சுகாதாரத் துறையினர் ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட  பகுதிகளில் கடந்த  ஜூலை மாதம் முதல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ெகாரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகமானது. கடந்த சில மாதமாக  தினமும் சராசரியாக 12 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளது தெரியவந்துள்ளது.   பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் நேற்று முன்தினம் வரையிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000க்கும் மேல் கடந்துள்ள நிலையில், கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளதா? என கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக சுகாதாரத்துறை குழுவினர் பொள்ளாச்சி நகராட்சி மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கட்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணியில் கடந்த சிலநாட்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் நகராட்சி மற்றும் கிராமபுறங்களில் என சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரத்த மாதிரி சேரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரக்குழுவினர் கூறுகையில், ‘பொள்ளாச்சி  நகராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலே கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளது. கொரோனா சமூக பரவல் உள்ளதா? என கண்டறியும் வகையில், ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யும்பணி நடக்கிறது. இப்பணி இன்னும் சில நாட்களுக்கு நடைபெற உள்ளது’ என்றனர்.

9 பேருக்கு கொரோனா: பொள்ளாச்சியில் நேற்று, சொர்ணபுஷ்பம் காலனியில் 63 வயது  ஆண், பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் வசிக்கும் 38 வயது நபர், நெகமம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐக்கும், செல்லப்பன் வீதியில் 50 வயது ஆண், வஞ்சியாபுரம் பிரிவில் 30 வயது ஆண், மாக்கினாம்பட்டியில் 28 வயது ஆண், சின்னாம்பாளையத்தில் 30 வயது ஆண், கோவிந்தனூரில் 46 வயது ஆண், திவான்சாபுதூரில் 57 வயது ஆண், ஆனைமலையில் 35 வயது பெண் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Health officials ,corona community spread ,
× RELATED ‘தீபாவளியன்று கொரோனா வந்தால் என்ன...