×

கொரோனா விழிப்புணர்வு பேரணி

கோவை,அக்.23: கோவை மத்திய சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு கோவை சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். பேரணியில் சிறை காவலர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர். சிறை கவாத்து மைதானத்தில் தொடங்கிய பேரணியானது பாரதியார் சாலை குடியிருப்பு, காட்டூர் போலீஸ் நிலையம் பின்புற சிறை காவலர் குடியிருப்பு வழியாக சென்று டவுன் பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது. பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி திரவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.

Tags : Corona Awareness Rally ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட...