×

காவல்துறை சார்பில் வீர வணக்கநாள் கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி, அக்.22:  கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில், காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, எஸ்பி. பண்டிகங்காதர் ஆகியோர் வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். மேலும் ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பிக்கள் சரவணன், முரளி, தங்கவேல், சங்கீதா, ராஜபாண்டி, இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி, பாஸ்கர், சுரேஷ்குமார், முரளி, செல்வகுமார், வெங்கடாஜலம், மற்றும் எஸ்.ஐக்கள் உள்ளிட்ட காவல்துறையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதுகுறித்து எஸ்பி கூறுகையில், ‘ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரமரணமடைந்த இவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என காவலர் வீர வணக்க நாளில் உறுதி மொழி ஏற்போம்,’ என்றார். முன்னதாக 18 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 3 சுற்று வீதம் 54 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினர். அதனை தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது