×

உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்

தர்மபுரி, அக்.22: தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில், பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசார் மற்றும் பாதுகாப்படை போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், தர்மபுரி எஸ்பி பிரவேஸ்குமார் ஆகியோர் அங்கிருந்த நினைவு தூணில், உயிர்நீத்த காவல்துறையினருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் மூன்று முறை முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். இதுகுறித்து எஸ்பி பிரவேஸ்குமார் கூறுகையில், ‘1959ம் ஆண்டு சீன ராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்திய பாதுகாப்புபடை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாகவும், பல்வேறு வித சம்பவங்களில் உயிர்நீத்த போலீசாருக்கும், இந்த வீர வணக்கநாள் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு இந்தியாவில் 264போலீசார் பணியின் போது உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது,’ என்றார்.

Tags : Weerawansa ,policeman ,
× RELATED கும்பல் தாக்குதலை சமாளிக்க...