×

உலக அயோடின் தின விழிப்புணர்வு

தர்மபுரி, அக்.22:தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதார துறை சார்பில், உலக அயோடின் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நகராட்சி சந்தைபேட்டை நகர மருத்துவமனையில் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் முன்னிலையில், வட்டார மருத்துவ அலுவலர் சரத்குமார் தலைமையில் உலக அயோடின் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவிலியர்கள், பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உறுதிமொழி ஏற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், வட்டார மருத்துவ அலுவலர் சரத்குமார், செவிலியர் நந்தகுமார், லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பென்னாகரத்தில் முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் நினைவுநாள் அனுசரிப்பு