×

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில், அக்.22: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. குழித்துறையில் 6.3, அடையாமடை 2, முள்ளங்கினாவிளை 6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.90 அடியாகும். அணைக்கு 412 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 519 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.பெருஞ்சாணி நீர்மட்டம் 71.45 அடியாகும். அணைக்கு 486 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.சிற்றார்-1ல் 14.69 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 9 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.சிற்றார்-2ல் 14.79 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 13 கன அடி நீர்வரத்து இருந்தது.
பொய்கையில் 17.30 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். முக்கடல் அணை நீர்மட்டம் 24.1 அடியாகும்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ