×

போலீஸ் பணியில் சேர இலவச பயிற்சி வகுப்பு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கலசபாக்கம், அக்.22: தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. உடற்தகுதி தேர்வில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெறும். இந்நிலையில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேரும் வகையில், எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஏற்பாட்டின்பேரில் ஆனைவாடி ஊராட்சியில் இலவச பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.

இதை எம்எல்ஏ பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசுகையில், ‘கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக பயிற்சி பெற்று, போட்டி தேர்வில் வெற்றியடைந்து காவல் துறையில் உயர்பதவிகளுக்கு செல்ல வேண்டும்'''' என்றார்.

Tags : MLA ,police force ,
× RELATED திமுக எம்எல்ஏ நிவாரண உதவி