×

9 லட்சத்தில் புதிய கூட்டுறவு கட்டிடம் எம்எல்ஏ திறந்து வைத்தார் வடமாதிமங்கலத்தில்

போளூர், அக்.22: சேத்துப்பட்டு ஒன்றியம் வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்ைடதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தங்கள் பகுதியில் புதிய கூட்டுறவு கடையை திறக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து, புதிய கூட்டுறவு கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வடமாதிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அ.அரங்கநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ச.சங்கர் முன்னிலை வகித்தார். செயலாளர் ம.மூர்த்தி வரவேற்றார். இதில் போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் கலந்து கொண்டு புதிய கூட்டுறவு கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து, வடமாதிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹25 லட்சத்திற்கான கடனுதவி காசோலையை எம்எல்ஏ கே.வி.சேகரன் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் அ.எழில்மாறன், பெ.மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் எஸ்.சுந்தரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் கு.சாமுண்டீஸ்வரி குமார், சங்க இயக்குனர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,building ,
× RELATED பென்னாகரத்தில் முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் நினைவுநாள் அனுசரிப்பு