×

மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரியின் வங்கி பண பரிவர்த்தனை விசாரணை போலீசார் தகவல் வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய

வேலூர், அக்.22: வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது கும்பத்தினரின் பெயரில் உள்ள 10 வங்கி கணக்குகளில் இதுவரை நடந்த பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். வேலூர் மண்டல மாசு கட்டுப்பாடு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம். காட்பாடி, ராணிப்பேட்டை வீட்டுகளில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ₹3.25 ேகாடி பணம், 3.5 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக பன்னீர்செல்வத்தின் மனைவி பத்மாவின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் லாக்கர் முடக்கப்பட்டது. கைப்பற்றிய 90 சொத்து ஆவணங்களில் 65 ஆவணங்கள் அசையா சொத்து என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லாக்கர் ஆகியவற்றை விஜிலென்ஸ் போலீசார் முடக்கி உள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது: பன்னீர்செல்வம் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகளில் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை நடந்துள்ள பண பரிவர்த்தனை தொடர்பான அறிக்கையை அந்தந்த வங்கி அதிகாரிகளிடம் கேட்டு உள்ளோம்.

ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைத்தும், அந்த வங்கி கணக்கில் இருந்தும் பணம் பரிவர்த்தனை நடந்த நபர்களிடம், என்ன காரணத்திற்காக பணம் பரிவர்த்தனை நடந்தது என்று அவர்களிடம் விசாரணையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு பணம் வாங்கி கொடுத்து உதவிய நபர்கள் யார்?, புரோக்கராக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர்.

Tags : Pollution Control Board Officer ,Vellore ,
× RELATED வேலூரில் கடந்த 4 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை