×

7 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட் தலைமை செயற்பொறியாளர் அதிரடி காட்பாடியில் மின் இணைப்பு வழங்க


வேலூர், அக். 22: காட்பாடியில் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க ₹7 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரிஷிகேஷ், விவசாயி. இவர் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்(53) என்பவரை அணுகி உள்ளார். அதற்கு அவர், ₹7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ரிஷிகேஷ், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ரிஷிகேஷ், கார்த்திகேயனிடம் ₹7 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கார்த்திகேயனை கைது செய்தனர். இந்நிலையில் மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ₹7 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்து வேலூர் மண்டல மின் பகிர்மான வட்ட தலைமை செயற்பொறியாளர் நேற்று உத்தரவிட்டார்

Tags : Chief Executive Engineer ,officer ,
× RELATED ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி...