×

திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்

சிவகாசி, அக். 22: திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார். திருத்தங்கல் நகராட்சியில் 21வது வார்டு திருப்பதி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 18வார்டு சுக்கிர வார்பட்டி சாலையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2வது வார்டில் பள்ளிக்கூட தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2வது வார்டு சிறுவர் பூங்கா தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 20வது வார்டில் அக்ரகார தெருவில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 18வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்பட ரூ.1 கோடியே 1 லட்சத்து மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், திருத்தங்கல் அதிமுக நகர கழக செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், திருத்தங்கல் மறவர் மகாசபை தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,municipality ,Tiruthangal ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை