×

பாசனம், குடிநீர் தேவைக்காக சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னை, அக்.22: சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனம், குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஏற்று, தேனி மாவட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.20 முதல் 15.3.21 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Opening ,Sothupparai Dam ,
× RELATED சாலை வசதி செய்துத்தரகோரி தேனியில் 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்..!!