பாசனத்திற்காக அக்.25 முதல் பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு.

சென்னை, அக். 22: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து 25.10.20 முதல் 3.3.21 முடிய 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மி.க. அடிக்கு மிகாமல் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: