×

போக்சோ வாலிபர் குண்டாஸில் கைது

திண்டுக்கல், அக். 22: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே வலையர் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (31). இவர் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஜயலட்சுக்கு, எஸ்பி ரவளிபிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் முத்துராஜ் குண்டாஸில் கைது செய்யப்பட்டார். 

Tags : Pokmon Walibur Kunda ,