×

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

திண்டுக்கல், அக். 22: 1959ம் ஆண்டு, அக்.21ல் நடந்த இந்தியா- சீனா போரில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். இத்தினம் காவலர் வீரவணக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உளள காவலர் நினைவு ஸ்தூபியில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி ரவளிபிரியா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், காவலர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் 3 சுற்று முழங்க அணிவகுப்பு காவலர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்களில் வீரமரணமடைந்த காவலர்கள் சுப்பிரமணியன், வில்சன், சேட் ஆகியோரது பெயரில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Tags : Weerawansa Day ,Dindigul Armed Forces Grounds ,
× RELATED ஊட்டி நகர தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு