×

“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல’’ கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றும் கிடைப்பதில் தாமதம் விவசாயிகளை நகரத்துக்கு செல்ல அலைக்கழிக்கும் அவலம்

திருத்துறைப்பூண்டி, அக்.22: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன் விடுத்துள்ள அறிக்கை: திருத்துறைப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்து அதனை பணமாக்குவதற்கு முன், அறுவடை செய்ய அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை, ஆட்கள் சம்பளம், நெல்லை நேரடி நெல் கொள்முதல்நிலையத்திற்கு எடுத்து சென்று காத்திருப்பதற்கும், காயவைப்பதற்கும், கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு நாற்பது ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கும், முன்பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை கைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்களும், வியாபரிகளும் நெருங்கும் பண்டிகை காலம், வீட்டில் செய்யப்படும் சுப-துக்க நிகழ்வுகளை சமாளிக்க பணத்தேவை என்பது அவசியமானதாக இருக்கிறது.

இந்நிலையில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு கோடிக்கணக்கான ரூபாய் தொகுப்பு திட்டங்களை அறிக்கைகள் வாயிலாக அறிவித்தாலும் மக்களின் கைகளுக்கு ஒருபைசா கூட கிடைக்காத நிலை உள்ளது . இந்நிலையில் தங்களின் தேவைகளை பூர்த்திசெய்துகொண்டு அன்றாட வாழ்க்கையை ஓட்ட தங்களிடம் இருக்கும் சொற்ப தங்கங்களை கொடுபோய் கூட்டுறவு தொடக்க வேளாண் மையங்களில் அடகு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும், மேலும் கடன் சங்கங்களில் வேறு வகையான கடன் கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

அப்படி கிராமப்பகுதி கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கங்களில்பெறப்படும் கடன் தொகைகளை கடன் பெறுபவர்கள், நகர்புறத்தில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் போய் பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அங்கே செல்லும் மக்களும் பணம் இல்லை என்று அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் கடன் பெரும் ஏழை எளிய மக்கள் பலமுறை நகரத்திற்கு பயணிக்க வேண்டிய நிலையில் மன உளைச்சளுக்கும் ஆளாகின்றனர். எனவே இந்த நிலையை தவிர்க்க கிராமப்புறத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண் மையங்களில் கொடுக்கப்படும் கடனை அதே வங்கியில் பணமாக்கிக்கொள்ளும் முறையை அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் அறிவிப்பால் செய்வதறியாது நிற்கும் விவசாயிகளும் பொதுமக்களும், தற்போது தங்களின் கடனுக்காக அலைக்கழிக்கப்படுதை எண்ணி கலங்கிப்போய் இருக்கின்றனர்.

ஏற்கனவே பண மதிப்பிழப்பின் போது பல்வேறு கூட்டுறவு தொடக்க வேளாண் மையங்களில் ஆளும் கட்சி நிர்வாகிகளால் கொண்டுவந்து டெப்பாசிட் செய்யப்பட பணங்கள் சுமார் 200 கோடி ரூபாய் எப்படி வந்தது என்கிற சந்தேகம் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. தற்போது ஆளும்கட்சியினரால் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேரிக் கொண்டு இருப்பதும் அதையும் அரசு கண்டுகள்ளவில்லை என்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் .உடனடியாக கிராமப்பகுதி கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செய்யும் பணப்பறிமாற்றங்களை அதே வங்கியில் செய்துபெற்றுக்கொள்ளவும் , நகரப்பகுதிக்கு அவர்களை அலையவிடும் செயலை நிறுத்திடவும், அரசு மற்றும் கூட்டுறவுத் துறையை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : delay ,city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்