தண்டவாளத்தை இணைக்க பயன்படும் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

தஞ்சை, அக். 22: தஞ்சை அருகே தண்டவாளத்தை இணைக்க பயன்படும் இரும்பு பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மண்டல கமிஷனர் மொய்தீன், துணை கமிஷனர் சின்னதுரை ஆகியோர் ஆணையின்படி தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உத்தரவின்பேரில் தஞ்சை ரயில்வே நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், இளங்கோவன், காவலர் ஆறுமுகம், குற்றப் புலனாய்வு பிரிவு மணிமாறன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பூதலூர் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது தண்டவாளத்தில் ஒருவர் சாக்கு பையுடன் நடந்து வந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை விரட்டி பிடித்தனர். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் பொன்மலையை சேர்ந்த நாசர் முகமது (50) என்பதும், அவர் வைத்திருந்த சாக்கு பையில் தண்டவாளத்தை இணைக்க பயன்படும் பேன்ட்ரோல் கிளிப்புகள் மற்றும் பிஷ்பிளேட் ஆகியவை திருடி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாசர் முகமதுவை கைது செய்ததுடன் இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: