×

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை

புதுக்கோட்டை, அக்.22: கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்படை போலீசார் 10 பேர் உயிரிழந்தனர். இதில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், நாடு முழுதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
இதில், கடந்த 1.9.2019 முதல் 31.8.2020 வரை காவல்துறையில் பணியின்போது உயிர் நீத்த 264 போலீசாருக்கு காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்பி பாலாஜிசரவணன், கூடுதல் எஸ்பி கீதா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

Tags : guards ,
× RELATED ஜவகர்லால் நேரு பிறந்தநாள்; பிரதமர், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை