×

மழையில் நனைந்த வாகன ஓட்டிகள் இடம் தேர்வு செய்து 10 ஆண்டுகளாகிறது பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி விரைவில் துவங்க சமக கோரிக்கை

பெரம்பலூர், அக்.22: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய மண்டல அமைப் புச் செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாள ருமான பாளையம் சின்ன சாமி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு, மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கென பெரம்பலூர் அரியலூர் சா லையில் ஒதியம் பிரிவு ரோடு பகுதியில் இடத்தைத் தேர்வுசெய்து, மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பையும், அரசாணையையும் வெளியிட் டது. பின்னர் பூமிபூஜைகள் கூட நடத்தப்பட்டு, மண் பரிசோதனை நடைபெற்றது.

ஆனால் ஏனோ இன்று வரை தொடர்ந்து நடைபெறக் கூடிய பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. தமிழகத்தில் இந்த ஆண்டு தொடங்குவதாக அறிவிக்கப் பட்ட மருத்துவ கல்லூரிகள் அனைத்திலும் கட்டுமான பணிகள் தொடங்கி நடை பெற்று வருகிறது. ஆனால் 10ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்ட அரசு மரு த்துவக் கல்லூரிக்கான பூர்வாங்கப் பணிகள் மட்டும் எந்த முன்னேற்றமும் இல் லாமல், கிணற்றில் போடப் பட்ட கல்லாக கிடக்கிறது. எனவே பெரம்பலூர் மாவ ட்ட ஏழை, நடுத்தர வர்க்க மாணவ, மாணவியரின் பெருங்கனவு நிறைவேறிட பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அரசு மருத் துவக் கல்லூரியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...