×

கோட்டுச்சேரி பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி திமுக சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டம்

காரைக்கால், அக்.22: காரைக்கால் நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதி திமுக சார்பில், கோட்டுச்சேரி பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனே அகற்றக்கோரி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாநில மருத்துவர் அணி அமைப்பாளர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ராஜீ, செல்வம், ஜெகன் மற்றும் திமுகவினரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி பகுதி முழுவதும் கடந்த பல மாதங்களாக குப்பைகள் சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இட்டங்களில், குப்பைத்தொட்டிகள் நிரம்பி சாலையோரத்தில் சிதறிக்கிடக்கிறது. எனவே, தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே சுத்தம் செய்யவேண்டும். நகர் பகுதியில் நடைபெறுவது போல், தினசரி குப்பைகளை சுத்தம் செய்யவேண்டும். குப்பை மற்றும் பொதுமக்கள் குறைகளை, கொம்யூன் ஆணையர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : Siege demonstration ,removal ,areas ,DMK ,
× RELATED பேரையூரில் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றம்