×

துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யகோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

நாகை, அக்.22: தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலை கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கும் போக்கை கைவிட வேண்டும். திண்டுக்கல் சிறுமி பாலியல் கொலைவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நபரையும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலை கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறு ப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Surappa ,protests ,removal ,India Youth Congress ,
× RELATED அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை...