×

கரூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ரூ.21.51 கோடியில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்

கரூர், அக். 22: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முலம் கரூர் ஒன்றியத்தில் ரூ. 21.51 கோடி மதிபபில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கரூர் ஒன்றியத்தில் காதப்பாறை, மின்னாம்பள்ளி, வாங்கல் குப்பிச்சிபாளையம், என்.புகளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 17,314 குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், காதப்பாறை ஊராட்சியில் 30லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, மண்மங்கலம் ஊராட்சியில் 60ஆயிரம் லிட்டம், 1லட்சம் லிட்டர், கொள்ளவுள்ள மேல்நிலை தொட்டி, ஆத்தூர் பூலாம்பாளையம் பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதே போல், திருக்காடுதுறை, சோமூர் போன்ற பல்வேறு பகுதிகளில் ரூ. 21.51 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுககு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், விஜயலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை உதவிப் பொறியாளர் சுதா உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags : Karur Union ,
× RELATED கரூர் ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்