×

10,438 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வாங்க மானியம்

திருப்பூர், அக்.22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கும், சுயமாக சிறுதொழில் செய்பவர்கள், தொகுப்பூதியம், தினக்கூலி பெறுபவர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் பயனடையலாம். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகிேயாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கியர் இல்லாத 125 சி.சி. திறனுக்குள் உள்ள இருசக்கர வாகன விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தின் கீழ் 2017-18 முதல் 2019-20 வரை 10 ஆயிரத்து 438 பெண்களுக்கு ரூ.26 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது