×

புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.22: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி சோழன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசின் தமிழர் விரோத போக்குக்கு மாநில அரசும் துணை போகிறது. இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : demonstration ,Revolutionary Youth Front ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்