×

நீலகிரி காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிப்பு

ஊட்டி, அக். 22: காவல்துறையில் சிறந்த முறையில் பணியாற்றி, பணியில் இருந்தபோதே பல்வேறு சம்பவங்களின் போதும், கலவரங்களின் போதும் உயிர் நீத்த காவல்துறையினருக்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அன்றைய தினம் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர்கள் நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று ஊட்டியில் உள்ள ராஜ்பவன் அருகேயுள் ஆயுதப்படை போலீசார் மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நீலகிரி மாவட்ட எஸ்பி. சசிமோகன், வீர மரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நீலகிரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

Tags : Nilgiris Police ,
× RELATED ஊட்டி நகர தி.மு.க., சார்பில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு