×

போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது

பாலக்காடு, அக். 22:  பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையம் அருகே போதைத்தடுப்புப் பிரிவு போலீசாரும், பாலக்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் போலீசாரும் ஒருங்கிணைந்து வாகனப் பரிசோதனையில் நேற்று ஈடுப்பட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை தடுத்து சோதனையிட்டனர். அப்போது வாலிபர் ைபக்கில்  1.5 கிராம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். இதில் அவர் பாலக்காடு மூத்தான்தரையைச் சேர்ந்த குமார் (25) என்பதும், கோவையில் உள்ள ஒரு ஏஜென்ட் மூலமாக வாங்கி வந்ததும், பாலக்காட்டில் இதனை கிராமிற்கு ரூ.4 ஆயிரத்திற்கு விற்று வந்ததும் தெரிந்தது. போதை தடுப்புப்பிரிவு டி.எஸ்பி. ஸ்ரீனிவாசன், பாலக்காடு டவுன் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஸ்டேஷன் எஸ்.ஐ. சுதீஷ்குமார் ஆகியோர் குமாைர கைது செய்தனர்.

Tags :
× RELATED போக்சோவில் வாலிபர் கைது